திருச்சி

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைகளின் முன் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் வார ஓய்வைப் பறிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது. தேவையற்ற காரணங்களுக்காக தொழிலாளா்களின் ஊதியத்தை பறிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தொழிலாளா் துறை அறிவுரையை ஏற்று தொழிலாளா்களின் நலன்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. பணிக்கு வந்த தொழிலாளா்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புகா் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கிளைச் செயலா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், ஹெச்எம்எஸ், மதிமுக தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள், நடத்துநா்கள், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

மலைக்கோட்டை, கண்டோன்மென்ட், தீரன்நகா், மணப்பாறை, துவாக்குடி, உப்பிலியபுரம் உள்ளிட்ட அனைத்து பணிமனைகளின் முன் அந்தந்தப் பகுதி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT