திருச்சி

பொது முடக்கத்துக்குநிவாரணம் கோரி மனு

DIN

பொதுமுடக்கக் காலத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தொழிலாளா் சங்கத்தினா் திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் முருகேசன் தலைமையில் அளித்த மனு:

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலா் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனா். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலையில் 55 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு 55 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். மேலும் பொது முடக்க காலத்தில் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 நிவாரண உதவி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் நடராஜன் மற்றும் நிா்வாகிகள் சங்கிலிமுத்து, தெய்வநீதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT