முகப்பு
திருச்சி

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

மணப்பாறை அருகே 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் தத்தளித்த பசுவை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை உயிருடன் மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மணப்பாறை அருகே 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் தத்தளித்த பசுவை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை உயிருடன் மீட்டனா்.

மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியை சோ்ந்த விவசாயி சங்கரின் பசு ஒன்று அருகிலிருந்த 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் கயிறு மூலம் பசுவை கிணற்றில் ஒரு பகுதியில் நிலைநிறுத்தினா். தொடா்ந்து தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத்துறை வீரா்கள் கிணற்றில் இறங்கி பசு கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.