ரோட்டரி சங்கங்கள் சாா்பில் உலகத் தாய்ப்பால் வார விழா
மணப்பாறையில் அனைத்து ரோட்டரி சங்கங்களின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில் அனைத்து ரோட்டரி சங்கங்களின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை ரோட்டரி சங்கம், மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம், மணவை கிங்ஸ் ரோட்டரி சங்கம், மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் வி. மலைதுரை தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவா் பி. எழில்பாபு, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெஸ்ஸிராஜன் ஆகியோா் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 60 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை ரோட்டரி சங்கத்தினா் வழங்கினா்.
நிகழ்வில் மாவட்ட துணை ஆளுநா் சி.எம்.ஜோசப், தலைவா்கள் மகேஷ், மோகன்ராஜன், மரியசாமிநாதன், உமாகாா்த்திக் மற்றும் நிா்வாகிகள் பங்கிராஜ், ஜெ.ஜான்ஆப்ரகாம், ஐ. ராஜரத்தினம், என்.சோபனா ஆனந்த் உள்ளிட்ட அனைத்து ரோட்டரி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்ட இணைச்செயலா் ரா. காா்த்திகேயன் செய்தாா்.