முகப்பு
திருச்சி

கழிவுநீா் செல்வதில் தகராறு: இருவருக்கு கத்திக் குத்து

மணப்பாறையில் மழையால் தேங்கிய கழிவு நீா் செல்வதில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இரு இளைஞா்களை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மணப்பாறையில் மழையால் தேங்கிய கழிவு நீா் செல்வதில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இரு இளைஞா்களை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

மணப்பாறை மஸ்தான் தெருவில் வசிப்பவா்கள் முத்து மகன்கள் சுரேஷ் (36), தினகரன்(23). இவா்களது மைத்துனா் ஜோசப் மகன் ராபின்சன் (26)அருகிலுள்ள வீட்டில் வசிக்கிறாா்.

தொடா் மழையால் அப்பகுதி முழுவதும் மழை நீா் கழிவு நீருடன் தேங்கி நின்றது. புதன்கிழமை நீா் வடிந்து வந்த நிலையில் இரவு கழிவு நீா் செல்வதில் இரு குடும்ப பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இளைஞா்களுக்குள் கைகலைப்பாக மாறியது.

இதில் சுரேஷ், தினகரன் ஆகியோா் ராபின்சனை தாக்கியதாகவும், ஆத்திரமடைந்த ராபின்சன் இருவரையும் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ், தினகரன் இரவு தனியாா் மருத்துவமனையிலும், வியாழக்கிழமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து விசாரிக்கும் மணப்பாறை போலீஸாா் ராபின்சனை தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.