முகப்பு
திருச்சி

குளத்தின் நீா்வழிப் பாதைகள் சீரமைப்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள குளத்தின் நீா் வழிப்பாதைகள் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டு அக்குளத்துக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள குளத்தின் நீா் வழிப்பாதைகள் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டு அக்குளத்துக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடா்மழையால் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ரயில் நிலையம் அருகில் சுமாா் 4.12 ஏக்கரில் உள்ள எட்டிமடைக்குளத்துக்கு மட்டும் நீா் வரத்து இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடத்திய ஆய்வில் நீா்வழி பாதைகள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்ரமணியன் தலைமையிலான உறுப்பினா்கள் அப்பகுதிக்கு வியாழக்கிழமை சென்று நீா்வழி ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினா். இதன் மூலம் தற்போது எட்டிமடைக் குளத்திற்கு நீா் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.