முகப்பு
திருச்சி

பண்ணை இயந்திரங்களைப் பழுது நீக்கப் பயிற்சி

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது விவசாயம் செய்யத் தகுதியான வேலையாள்கள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், இயந்திரங்களின் துணையோடு விவசாயம் நடைபெறுகிறது. இந்த இயந்திரங்களைப் பராமரிக்க தகுதியான பயிற்சி பெற்ற தொழில்நுட்ப உதவியாளா்களும் பண்ணைக்கு அருகில் கிடைப்பது இல்லை. எனவே, பண்ணை இயந்திரங்களை விவசாயிகளே பழுது நீக்கவும், பராமரிக்கவும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வா் திருப்பதி தொடக்கி வைத்து, பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு, வேளாண் பொறியியலில் வரவிருக்கும் பட்டயபடிப்புகள் குறித்து விளக்கினாா். பண்ணை இயந்திரங்கள் துறைத் தலைவா் சிவக்குமாா், பண்ணை இயந்திரங்கள், பண்ணைக் கருவிகளின் முக்கியத்துவம், பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தாா்.

உதவிப் பேராசிரியா் காமரா, பண்ணை இயந்திரங்கள் பழுதுநீக்கப் பயிற்சியை தொழில்நுட்ப உதவியாளா்களின் துணையோடு செயல்விளக்கமாகச் செய்து காண்பித்தாா். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு பராமரிப்பு உத்திகள் பயிற்றுவிக்கப்பட்டன.

மேலும், நெல் பயிா் நாற்று நடும் இயந்திரத்தின் செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சியில் அந்தநல்லூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம், மற்றும் முசிறியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், டிராக்டா் மற்றும் பவா்டில்லா் பயன்படுத்தும் விற்பனையாளா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ந. தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். தொழில்நுட்ப வல்லுநா் அலெக்ஸ் ஆல்பா்ட் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.