தொடக்க வீரர்களில் மாற்றம்..! சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு!
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் குறித்து...
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக புதியவர்கள் களமிறங்குவார்கள் என அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் த்ரிபாதி என பலரும் களமிறங்கினார்கள். இந்த நிலையில் புதிய தொடக்க வீரர்கள் களமிறங்குவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (5) கோப்பைகள் வென்ற அணிகளாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கின்றன. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை மார்ச் 30ஆம் தேதி எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement
சிஎஸ்கே அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துகிறார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் சரியாக அமையவில்லை. பாதியில் இருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐபிஎல் கேப்டன்கள் நிகழ்வில் ருதுராஜ் கெய்க்வாட் பேசியதாவது:
இந்த சீசனில் நானும் சஞ்சு சாம்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்குகிறோம் எனக் கூறியுள்ளார். இதனால், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மூன்றாம் இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்.4,5 இடங்களில் துபே, பிரெவிஸ் களமிறங்குவார்கள்.
Change in the opening players..! CSK captain announcement!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.