டிரோஜன் போர்: ஒடிசி பட கதாபாத்திரங்களாக சிஎஸ்கே வீரர்கள்!
தி ஒடிசி திரைப்படத்தின் கதாபாத்திர உடைகளில் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள் குறித்து...
தி ஒடிசி திரைப்படத்தின் கதாபாத்திர உடைகளில் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
கிரேக்க காவியம் ஓமரின் ’தி ஒடிசி’ கவிதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ஜூலை 17ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் காமிராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.3, 108 கோடியும் இந்தியாவில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தி டோர்ஜன் வார் (The tROAR-jan war) எனக் குறிப்பிட்டுள்ளது. டிரோஜன் எனும் ஆங்கில வார்த்தையில் ரோர் (tROAR) என்ற வார்த்தையை மட்டும் சிஎஸ்கே அணியைக் குறிப்பிடுவது போல எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பதிவில் ஒடிசியஸ் கதாபாத்திரத்தில் எம்.எஸ். தோனி, அகமெம்னான் கதாபாத்திரத்தில் சஞ்சு சாம்சனும் டெலிமாக்கஸ் கதாபாத்திரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் புகைப்படங்களையும் உருவாக்கியுள்ளது.
சிஎஸ்கே அணி கடந்த இரண்டு சீசன்களாக மோசமாக விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் ஃபிளெமிங் விலகினார். கேப்டன் ருதுராஜ் என்னாகுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
The tROAR-jan war! csk team players in Odyssey film characters
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.