சர்ச்சை இயக்குநர் இயக்கத்தில் திரைப்படமாகும் ஆபரேஷன் சிந்தூர்!
ஆபரேஷன் சிந்தூர் திரைப்படம் அறிவிப்பு...
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் திரைப்படமாக்க உள்ளதாக பிரபல இயக்குநர் அறிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது. இத்துடன் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ டிரோன்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதால் இந்திய ராணுவம் போர்த்தாக்குதலில் இறங்கியது.
தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பட்டு போரை நிறுத்தினர்.
Advertisement
இதன் பரபரப்பு முடிவதற்கு முன்பாகவே ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட திரைப்பட போஸ்டர் வெளியானது. இப்படத்தை நிக்கி விக்கி பஹானி பிலிம்ஸ் மற்றும் கண்டெண்ட் இஞ்சினியர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உத்தம் - நிதின் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மிஷன் சிந்தூர் ஆகிய பெயர்களைப் பெற ஹிந்தி சினிமாத் தயாரிப்பு சங்கங்களை நாடின.
இந்த நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மூலம் பேசப்பட்ட சர்ச்சை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், நானும் பூசன் குமாரும் (தயாரிப்பாளர்) ஆபரேஷன் சிந்தூர் திரைப்படத்தில் இணைகிறோம். இது, முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலோன் எழுதிய, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.