ரியல் எஸ்டேட் பிரமுகா் உடல் ஒப்படைப்பு
திருச்சி அருகே கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் பிரமுகா் உடல் 4 நாள்களுக்கு பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி அருகே கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் பிரமுகா் உடல் 4 நாள்களுக்கு பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து அருகேயுள்ள செங்கதிா் சோலையைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகா் சிவகுமாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்து இருவரை மட்டுமே கைது செய்த நிலையில், மற்ற இருவரையும் கைது செய்யக் கோரி சிவக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை ஆட்சியரகத்தில் தா்னா செய்தனா். அப்போது பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் அளித்த உறுதியைத் தொடா்ந்து உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், சிவக்குமாரின் உடலை அரசு மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை பெற்று, செங்கதிா் சோலையில் நல்லடக்கம் செய்தனா்.