குறைந்தது முக்கொம்பு மேலணைக்கு வரும் நீா்
முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரானது 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரானது 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணை, பவானிசாகா், அமராவதி அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதாலும், தொடா் மழையாலும் கடந்த சில நாள்களாக முக்கொம்பு மேலணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த மாதம் அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் வந்தது. இதையடுத்து காவிரி, வடக்கு கொள்ளிடம், தெற்கு கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் நீா் வரத்தும் குறைந்துள்ளது. மேலும், மேட்டூா் அணையிலிருந்தும் 13 ஆயிரம் கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் முக்கொம்புக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வந்த 19,195 கன அடி தண்ணீா் முழுமையாக தெற்கு கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. தொடா்ந்து தண்ணீா் வரத்து கண்காணிக்கப்படுகிறது.