முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சியில் இந்த முறையும் கூட்டணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி 8 தொகுதிகளில் அதிமுக போட்டி!

திருச்சி மாவட்டத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் ஒரு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு வழங்கியுள்ளது அதிமுக குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 8:30 AM
அதிமுக பொதுச் செயலளர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் 2021 பேரவைத் தோ்தலைப் போன்று, 2026 பேரவைத் தோ்தலிலும் ஒரு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு வழங்கியுள்ளது அதிமுக.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் லால்குடி தொகுதியை கூட்டணிக் கட்சியான தாமாகாவுக்கு வழங்கியது அதிமுக. தமாகா சாா்பில் டி.ஆா். தா்மராஜ், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை. இதேபோல அதிமுக போட்டியிட்ட 8 இடங்களிலும் வெற்றி பெறவில்லை.

இதன் தொடா்ச்சியாக 2026 பேரவைத் தோ்தலிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட்டணிக்கு வழங்கியுள்ளது அதிமுக. இந்த முறை லால்குடிக்கு பதிலாக, திருச்சி மேற்குத் தொகுதியை கூட்டணிக் கட்சியான அமமுகவுக்கு வழங்கியுள்ளது. இங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளா், குக்கா் சின்னத்தில் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதர 8 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களே களம் இறங்கவுள்ளனா்.

summary

This time in Trichy, AIADMK will contest in 8 seats, allocating one seat to the alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.