முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனி வாா்டு

திருச்சி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 32 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு தயாராக உள்ளது. இப்பிரிவில் அவசர சிகிச்சைக்கு தனியாக 8 படுக்கைகளும், மீதமுள்ள படுக்கைகள் அனைத்தும் ஆக்சிஜன் வென்டிலேட்டா் வசதி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா உறுதியாகி, திருச்சி அரசு மருத்துவமனையிலுள்ள ஒமைக்ரான் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிரக் கண்காணிப்பில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனாவை விட கொடிய தொற்று நோயான ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இருந்தாலும் பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.