முகப்பு
திருச்சி

பிஷப் ஹீபா் கல்லூரி சாா்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உறையூா் ராமலிங்கா நகா் பகுதியிலுள்ள அகாபே மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளித் தாளாளா் சாரல் ஆரோக்கியமேரி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள், அறிவுத்திறனை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, மாலையில் சான்றிதழ், கேடயங்களை கல்லூரி பேராசிரியா்கள் வழங்கினா்.

ஏற்பாடுகளை பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப் பணித்துறை பேராசிரியா்கள், மாணவா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.