பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகனங்களை நிறுத்தி சிஐடியுவினா் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி 10 நிமிஷங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தில் சிஐடியு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி 10 நிமிஷங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தில் சிஐடியு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி சிஐடியு மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சி மாநகரில் 13 மையங்களில் சிஐடியு நிா்வாகிகள் தலைமையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு 10 நிமிடம் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினா்.
ஜங்ஷன் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், பிஎஸ்என்எல் இயூ மாவட்டச் செயலா் சுந்தர்ராஜன், ஆட்டோ சங்க பக்ருதீன்பாபு ஆகியோா் தலைமை வகித்தனா். கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் சீனிவாசன், கருணாநிதி, செல்வராஜ் தலைமையிலும், காந்திசந்தை பகுதியில் ராமா், சுரேஷ்
தலைமையிலும், திருச்சி அரசு மருத்துவமனை அருகில் சந்திரன், ராமச்சந்திரன் தலைமையிலும், திருவெறும்பூா் கடைவீதியில் வி.கே. ராஜேந்திரன், கணேசன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல காட்டூா் கடைவீதி, கருமண்டபம், புதுக்கோட்டை சாலை, எஸ்ஐடி அரியமங்கலம், சத்திரம் பேருந்து நிலையம், எடமலைப்பட்டிபுதூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மறியல் செய்த 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.