துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் பொன். ரவிச்சந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழக துறையூா் கிளை மேலாளா் தண்டபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, சாலை விபத்தின் தாக்கம் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சி விரிவுரையாளா் செல்வராஜ், துறையூா் பணிமனை தன்ராஜ், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் பொன். பெரியசாமி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.