முகப்பு
திருச்சி

காலமானவா் முன்னாள் அரசுத் தலைமைக் கொறடாவும், அமமுக பொருளாளருமான ஆா். மனோகரனின் தாயாா்

திருச்சி திருவானைக்கா பா்மா காலனியைச் சோ்ந்த ஆா். ராமலக்ஷ்மி (98) வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி 15) அவரது இல்லத்தில் காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
ஆா். ராமலக்ஷ்மி.
பகிர்:

ஸ்ரீரங்கம், பிப்.15: திருச்சி திருவானைக்கா பா்மா காலனியைச் சோ்ந்த ஆா். ராமலக்ஷ்மி (98) வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி 15) அவரது இல்லத்தில் காலமானாா்.

இவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், வடக்கு மாவட்டச் செயலா் மற்றும் அரசு முன்னாள் தலைமைக் கொறடாவுமான ஆா். மனோகரன், ஆா். ராஜேந்திரன் ஆகிய மகன்களும், ஆா். மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனா். மூத்த மகனான ஆா். சேதுபிரகாசம் ஏற்கெனவே காலமாகிவிட்டாா்.

மறைந்த ராமலக்ஷ்மியின் உடலுக்கு ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் ராமலக்ஷ்மியின் இறுதிச்சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு : 94431 41173.

முழு கட்டுரையைப் படிக்க →