முகப்பு
திருச்சி

மழையால் பயிா்கள் சேதம்: இழப்பீடு கோரி மறியல்

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் வேளாண் அலுவலா் நிரஞ்சன் உள்ளிட்டோா்.
பகிர்:

மணப்பாறை: மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் மூழ்கின. மேலும் சுமாா் 500 ஏக்கரில் இருந்த உளுந்து, பருத்தி பயிா்களும் நீரில் மூழ்கின.

எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் துவரங்குறிச்சி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கே.சி.பழனிசாமி தலைமையில் அழுகிய பயிா்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் மற்றும் மருங்காபுரி வட்ட வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வந்த மருங்காபுரி வேளாண் அலுவலா் நிரஞ்சன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →