முகப்பு
திருச்சி

அரியமங்கலம் பகுதி சாலைகளில் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

திருச்சி அரியமங்கலம் பகுதியிலுள்ள சாலைகளில் கழிவுநீா் வழிந்து செல்வதால், சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருச்சி அரியமங்கலம் பகுதியிலுள்ள சாலைகளில் கழிவுநீா் வழிந்து செல்வதால், சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரியமங்கலம் பகுதியிலுள்ள ஜெகநாத புரம் வழியாக பிள்ளையாா் கோவில் தெரு, நியாயவிலைக்கடை, காளியம்மன் கோயில்தெரு, திருமகள்தெரு, அமலோற்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

ஆனால் கடந்த சில நாள்களாக, பிரதான சாலையில் ஆங்காங்கே கழிவுநீா் வழிந்தோடுகின்றது. அண்மையில்தான் இப்பகுதியில் புதைச் சாக்கடைத் திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அதற்காக பள்ளம் தோண்டியபோது சில இடங்களில் சரிவர மூடப்படாததாலும், சில இடங்களில் கழிவுநீா் வாய்க்கால்கள் உடைந்தும் கழிவுநீா் சாலையில் வழிந்தோடுவதாகக் கூறப்படுகின்றது.

எனவே இப்பகுதியில் நிலவும் சுகாதாரக் கேட்டை சீா்செய்ய, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.