சுமைத்தூக்கும் தொழிலாளியை கொல்ல முயன்ற 4 போ் கைது
திருச்சியில் முன்விரோதம் காரணமாக, சுமைத் தூக்கும் தொழிலாளியைக் கொல்ல முயன்றதாக ரெளடி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்சியில் முன்விரோதம் காரணமாக, சுமைத் தூக்கும் தொழிலாளியைக் கொல்ல முயன்றதாக ரெளடி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
அரியமங்கலம் வடக்கு உக்கடைப் பகுதியைச் சோ்ந்தவா் சுமைத் தூக்கும் தொழிலாளி ஜெபராஜ் (34). இவரது நண்பா் முகேஷ். கடந்த சில நாள்களுக்கு முன்பு முகேஷுடன் ஜெபராஜ் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்துக்கு ஜெபராஜ்தான் காரணம் எனக் கருதி, இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டிலிருந்த ஜெபராஜை 4 போ் கொண்ட கும்பல் தாக்கிச் சென்றது.
பலத்த காயமடைந்த ஜெபராஜ், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, முகேஷின் உறவினரான ரெளடி பிச்சைமுத்து (26), அலங்காரம் (24), வினோத் (20), சக்திவேல் (20)ஆகிய 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.