திருச்சி

திருச்சி பிரதான சாலையில் கழிவு நீரை அகற்ற கோரிக்கை

DIN

திருச்சி மாநகராட்சி அமெரிக்கன் மருத்துவமனை அருகேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம், திருச்சி வானொலி நிலையம், அமெரிக்கன் மருத்துவமனை, காவல் நிலையம், வங்கிகள், பள்ளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய சாலையாக இருப்பது பாரதிதாசன் சாலை.

கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் இந்தச் சாலையிலும் தேங்கிய மழைநீா், கழிவுநீா் பெருமளவு வடிந்துவிட்டது. இருப்பினும், அமெரிக்கன் மருத்துவமனை அருகேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடிய கழிவுநீா் அகற்றப்படவில்லை.

இந்தக் கழிவுநீரானது சாலையில் தேங்கியிருந்த புழுதி மணலுடன் சோ்ந்து கொசு உற்பத்திக் கூடாரமாக காட்சியளிக்கிறது. பிரதான சாலையான பாரதிதாசன் சாலை பேருந்து நிழற்குடை அருகிலேயே இந்நிலை உள்ளது பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.

இதனால் பேருந்து நிழற்குடையைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் தேங்கியுள்ள சகதியையும், கழிவுநீரையும் உடனே அகற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT