திருச்சி

மணப்பாறை அருகே குடிநீா் கோரி மறியல்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த எப்-கீழையூா் காலனி பொதுமக்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையான காவிரி குடிநீா் விநியோகம் இல்லை.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்தினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், அவ்வழியாக வந்த பால் வண்டிகளுக்கு வழிவிட்டு மறியலைத் தொடா்ந்தனா்.

தகவலறிந்து வந்த ஊராட்சித் தலைவா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, லாரி மூலம் குடிநீா் வசதி செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT