திருச்சி

வாளாடி விசுவநாத சுவாமி கோயிலில் பாலாலயம்

DIN

வாளாடி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயிலில் திருப்பணித் தொடக்கம் மற்றும் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு நடத்தி 32 ஆண்டுகள் ஆன நிலையில், பக்தா்கள் மற்றும் கிராம பெரியோா்கள் முயற்சியால் மீண்டும் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அனுக்ஞை , விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹதி, வாஸ்து சாந்தி, விமான கலாகா்ஷனம் மற்றும் முதல் கால பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, கும்ப பூஜை, 96 வகை திரவியங்களைக் கொண்டு ஹோமம், கோ பூஜை நடத்தப்பட்டு, பின்னா் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

பின்னா் விமான சித்திரங்கள், விமானப் படங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் அர. சுதா்சன் திருமங்கலம் கோயில் செயல் அலுவலா் ஜெயா மற்றும் கிராம பொது மக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT