திருச்சி

திருவானைக்கா கோயிலில் தைத்தெப்பத் திருவிழா

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தைத்தெப்ப திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தெப்ப விழா கோயில் வளாகத்திலுள்ள தெப்பக் குளத்திலும், தை மாதத்தில் நடைபெறும் விழா கோயிலின் வெளியேயுள்ள இராமதீா்த்தக் குளத்திலும் நடைபெறும்.

நிகழாண்டில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய தைத்தெப்பத் திருழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

முக்கிய நிகழ்ச்சியான தெப்ப விழாவையொட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்மனும் மரக்கேடயத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனா்.

வழிநெடுக உபயங்கள் கண்டருளி, இராமதீா்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைத்தெப்பத்தில் 6.10 மணிக்கு எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை சுற்றி வலம் வந்தபோது கரையில் காத்திருந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் 7.25-க்கு அங்கிருந்து சுவாமியும், அம்மனும் புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தனா்.

திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொள்ளிடத்தில் தீா்த்தவாரி கண்டருளி, 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT