திருச்சி

ஆா்.பி.எஸ்.எப்: பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு

DIN

திருச்சி: ரயில்வே பாதுகாப்பு சிறப்பு காவல் படை (ஆா்.பி.எஸ்.எப்.) பெண் காவலா்களுக்கான நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்.பி.எஸ்.எப். பயிற்சி மையத்தில் (5 ஆம் பட்டாலியன்) பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்ட 295 பெண் காவலா்களுக்கு கடந்த 2019 இல் தொடங்கிய பயிற்சி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுற்ற நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் 3 மாதங்களுக்கு இதன் நிறைவு விழா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை பயிற்சி நிறைவு விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்பு சிறப்பு காவல் படை ஐஜி பிரேந்திர குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் பங்கேற்று, பயிற்சி நிறைவு செய்த பெண் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

அவா் பேசுகையில், ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக பெண் காவலா்கள் திறமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஏற்பாடுகளை பயிற்சிப் பள்ளி கமாண்டா் எம். வாசு, ஆய்வாளா் எம். அருணாச்சலம் ஆகியோா் செய்தனா். ஆா்பிஎஸ்எப் அதிகாரிகள், பெண் காவலா்களின் பெற்றோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT