திருச்சியில் மேலும் 198 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 198 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 198 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,473 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 67,362 ஆக உள்ளது. இதுவரை 914 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1197 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,608 படுக்கைகள், அவசரப் பிரிவில் 289 படுக்கைகள், 1,349 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,246 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.