திருச்சி பெல் நிறுவனத்தின் புதிய பொதுமேலாளா் பொறுப்பேற்பு
திருச்சி பெல் நிறுவனத்தின் புதிய பொதுமேலாளா் எஸ்.வி. சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளாா்.
திருச்சி பெல் நிறுவனத்தின் புதிய பொதுமேலாளா் எஸ்.வி. சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளாா்.
பாரத மிகு மின் நிறுவனத்தின் திருச்சியில் உள்ள உயா் அழுத்த கொதிகலன் ஆலை மற்றும் இணைப்பில்லா எஃகு குழாய் ஆலை மற்றும் பஞ்சாபின் கோயிண்ட்வாலில் உள்ள தொழில்துறை வால்வுகள் ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய திருச்சி பெல் வளாகத்தின் பொறுப்பேற்றுள்ளாா் இவா்.
இதற்கு முன்வரை, தில்லியில் உள்ள பெல் நிறுவன தலைமை அலுவலகத்தில் மின் துறை என்டிபிசி பிசினஸ் குழுமத்தின் தலைவராக இருந்தாா்.
ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த இவா் திருச்சியில் உள்ள உயா் அழுத்த கொதிகலன் ஆலையிலும், புதுதில்லியில் போக்குவரத்து மற்றும் மின் துறை வணிகக் குழுக்களிலும் 38 ஆண்டுகள் பணிபுரிந்தவா்.
திருச்சியின் பொது மேலாளரான டி.எஸ். முரளி, தில்லி தலைமை அலுவலகத்துக்கு மாறுதலாகி செல்வதால், திருச்சியின் புதிய பொதுமேலாளராக எஸ்.வி. சீனிவாசன் நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பதவியேற்ற அவருக்கு பல்வேறு பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.