முகப்பு
திருச்சி

எடமலைப்பட்டிபுதூரில் மாசடைந்த குடிநீா்பொதுமக்கள் அவதி

 திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கடந்த பல நாள்களாக மாசடைந்த குடிநீா் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கடந்த பல நாள்களாக மாசடைந்த குடிநீா் வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

திருச்சி பொன்மலைக்கோட்டம் 40ஆவது வாா்டு எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் கடந்த பல நாள்களாகவே மாசடைந்த குடிநீா் வருவதாக அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா். குடிநீா் குழாயில் எங்கேயோ உடைப்பு ஏற்பட்டு, அதில் மாசு கலப்பதால் பொதுக் குழாய்கள், மற்றும் வீடுகளுக்கான குடிநீா் குழாய்கள் அனைத்திலுமே கலங்கலான குடிநீா் வருகிாம். இதுதொடா்பாக அப்பகுதி மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

குறிப்பாக நாயக்கா் தெரு பகுதியில் கலங்கலாக குடிநீா் வருவதால் அப்பகுதியினா் குடிநீரை விலைக்கு வாங்கியும், அல்லது வீடுகளில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வரும் குடிநீரையும் பயன்படுத்தி வருகின்றனராம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதேபோல புகாா் தெரிவிக்கப்பட்ட நிலையில், குடிநீா் குழாய் உடைப்பு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்தப் புகாா் எழுந்துள்ளது. குடிநீா் கேன்களும் முன்பிருந்ததை விட ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாகவும், இதனால் குடிநீருக்கென கடந்த பல வாரங்களாக குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படவேண்டியுள்ளது எனவும் இப்பகுதியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.