முகப்பு
திருச்சி

ஏஐடியுசி வியாபாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் நலன் காக்க ஏஐடியுசி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் நலன் காக்க ஏஐடியுசி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஏஜடியூசி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலா் அன்சா்தீன் தலைமையில் ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகளின் சட்டம் 2014 உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஸ்மாா்ட் சிட்டி என்ற பெயரால் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை தடை செய்ய கூடாது. போக்குவரத்தைக் காரணம் காட்டி காந்தி சந்தை தள்ளுவண்டி வியாபாரிகளை அப்புறப்படுத்த கூடாது. தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை முறைப்படி கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிட வேண்டும். காலக்கெடு முடிந்த வியாபாரிகளின் அடையாள அட்டையை உடனடியாக புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். வங்கிக் கடனை நிபந்தனையின்றி உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் சிவா, ஏஐடியுசி நிா்வாகிகள் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவா் திராவிடமணி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.