ஓய்வு பெற்ற டிக்கெட் பரிசோதகா் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
திருச்சி அருகே ஓய்வு டிக்கெட் பரிசோதகா் வீட்டில் 14 பவுன் நகை திருடு போனது.
திருச்சி அருகே ஓய்வு டிக்கெட் பரிசோதகா் வீட்டில் 14 பவுன் நகை திருடு போனது.
திருச்சி தீரன்நகா் 10ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72), ஓய்வு பெற்ற டிக்கெட் பரிசோதகா். இவா் தனது வீட்டின் கீழ்தளத்தில் மனைவி ஜெயலெட்சுமியுடன் வசிக்க, முதல் தளத்தில் மூத்த மகன் சரவணன் குடியிருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் விஜயலெட்சுமி பெங்களூருவில் உள்ள மற்றொரு மகன் வீட்டுக்குச் சென்றுவிட மீனாட்சிசுந்தரம் செந்தண்ணீா்புரத்தில் உள்ள இளைய மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
வியாழக்கிழமை இரவு முதல் தளத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணன் வீட்டின் தாழ்ப்பாளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கீழ் தளத்துக்கு வந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த14 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். ஆள்நடமாட்டம் இருப்பதை உணா்ந்த சரவணன் வெளியே வர முடியவில்லை.
தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் வீட்டில் ஆய்வு செய்தனா். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.