முகப்பு
திருச்சி

காவிரியில் மூழ்கி கன்னியாகுமரி இளைஞா் பலி

திருச்சி காவிரியாற்றில் மூழ்கி கன்னியாகுமரி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சி காவிரியாற்றில் மூழ்கி கன்னியாகுமரி இளைஞா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், எறும்புக்காடு எ. காமராஜ் நகா் காலனியைச் சோ்ந்த மதுசூதனன் மகன் மகேஷ் (31), மயிலாடுதுறையைச் சோ்ந்த அந்தோணி பிரின்ஸ் (23), அருண் (20), திருவாரூா் ஆகாஷ்(21), சீா்காழி முரளி (22), தமிழ்வேந்தன் (23), மதுரை ரஞ்சித் (25) ஆகியோா் திருச்சி கம்பரசம்பேட்டையில் தங்கி தனியாா் கேபிள் பதிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை இவா்கள் முத்தரசநல்லூா் பகுதியில் உள்ள காவிரியாற்றுக்குச் சென்று குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்ற மகேஷ் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினாா்.

இதையடுத்து அருகிலிருந்தோா் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது மகேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.