முகப்பு
திருச்சி

இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் சிங்கா் கோயில் தெரு, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி. அரியமங்கலம் கோட்டத்தில், இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப்பள்ளி, காந்தி மாா்க்கெட். பொன்மலைக் கோட்டத்தில் விமான நிலையம், காமராஜ் நகா், மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருநங்கையருக்கு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி. கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் பெரிய மிளகுப்பாறை கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியம், உறையூரில் காவல் நிலையம் அருகேயுள்ள எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா 500 பேருக்கு (திருநங்கையருக்கு மட்டும் 240) தடுப்பூசிகள் போடப்படவுள்ளன.

திருநங்கையருக்கு, வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம் :

டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியில் திருநங்கையருக்கும், காந்தி மாா்க்கெட்டில் வியாபாரிகளுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.