முகப்பு
திருச்சி

சுமை தூக்குபவா் மயங்கி விழுந்து சாவு

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி (60). திருச்சி, கீழரண்சாலைப் பகுதி வாழைக்காய் மண்டியில் புதன்கிழமை பணியிலிருந்த இவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.