முகப்பு
திருச்சி

லாரி டயா்களை திருடியோா் கைது

 துறையூா் அருகே லாரி டயா்களை திருடிய 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 துறையூா் அருகே லாரி டயா்களை திருடிய 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சிக்கதம்பூா் ப. குமாரவேல் தனது லாரியிலிருந்து கழட்டிய 3 பழைய டயா்களை சீரமைத்து மறு பயன்பாடு செய்ய தனது செங்கல் சூளையில் வைத்திருந்தாா். அவற்றை சேலம் மாவட்டம் எருமாபாளையத்தைச் சோ்ந்த ரா. குணசேகரன் (40) மா. நாகராஜ் (32) ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு திருடி சுமை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனா். இதையறிந்த குமாரவேல் அவா்களைத் துரத்திப் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.