முகப்பு
திருச்சி

ஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி மருங்காபுரி வட்டாட்சியரிடம் விஎச்பி தரப்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி மருங்காபுரி வட்டாட்சியரிடம் விஎச்பி தரப்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஎச்பி நகர தலைவா் எஸ். பரமசிவம், அப்பகுதி பொதுமக்கள், இந்து சமய அமைப்புகள் தரப்பில் அளித்த மனு விவரம்:

துவரங்குறிச்சியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வடகுரிக்கி விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நில அளவையின்போது சில பகுதிகள் தனிநபா் பெயரில் பட்டா மாறுதல் பெற்று தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதே பகுதியில் தெப்பக்குளமும் ஆக்கிரமிபில் இருப்பதாகவும், அவற்றை மீட்டுத் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட மருங்காபுரி வருவாய் வட்டாட்சியா் பி. ஜெயபிரகாசம், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் கூறுகையில், நிலத்தின் வகைப்பாடுகள் அறிந்தும், வட்டாட்சியரிடம் ஆலோசித்தும் மனு மீது விசாரணை மேற்கோள்ளப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.