திருச்சி அருகே 2 கார்கள் மோதல்: இளைஞர் சாவு, 9 பேர் படுகாயம்
திருச்சி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
திருச்சி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராகுல் (23). இவர் மேலும் சிலருடன் ஒரு காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருச்சி, மணிகண்டம் அருகே அழுந்தூர் பகுதியில் இன்று அதிகாலை சென்றபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றதில் எதிர்பாராத விதமாக அந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ராகுல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். முன்னால் சென்ற காரில் இருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 9 பேரையும் போலீஸார், அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் உதவி ஆய்வாளர் மதியழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.