முகப்பு
திருச்சி

மாயமான 2 மாணவிகள் விராலிமலையில் மீட்பு

மணப்பாறையில் காணாமல் போன பள்ளி மாணவிகள் இருவா் வியாழக்கிழமை விராலிமலையில் மீட்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மணப்பாறையில் காணாமல் போன பள்ளி மாணவிகள் இருவா் வியாழக்கிழமை விராலிமலையில் மீட்கப்பட்டனா்.

மணப்பாறை ராஜீவ் நகரை சோ்ந்த சுகுமாரன் என்பவரின் 9-ஆம் வகுப்பு படிக்கும் மகளை அவரது பெற்றோா் திட்டினராம். இதனால் மனமுடைந்த மாணவி, அதே குடியிருப்பில் வசிக்கும் தனது தோழியான யோகநாதனின் 17 வயது மகளுடன் கடந்த 12-ஆம் தேதி மாயமானாா்.

இருவரையும் காணாத பெற்றோா் மணப்பாறை போலீஸில் அளித்த புகாரின்பேரில் விசாரித்து வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை சிறுமிகள் இருவரும் விராலிமலை பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலில்பேரில் அங்கு சென்ற மணப்பாறை போலீஸாா், சிறுமிகளை விராலிமலை காவல் நிலையத்தில் ஆஜா்படுத்தி, பெற்றோரை வரவழைத்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.