திருச்சி

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் அமைச்சரிடம் மனு

DIN

டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் தலைமையில் அளித்த மனு:

18 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், தகுதியானோருக்கு பதவி உயா்வு மற்றும் விருப்பப்பட்ட ஊழியா்களுக்கு தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்.

விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். பணி நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை என ஆக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT