சுயதொழில் தொடங்கும்மாற்றுத் திறனாளிகள்மானிய உதவி பெறலாம்
திருச்சி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் மானிய உதவி வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் மானிய உதவி வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்குள்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா் மற்றும் புறஉலகுச் சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளைத் தவிர பிற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு ரூ. 75 ஆயிரம் வங்கிக் கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
வங்கி மூலமாக விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
விரும்பும் மாற்றுத்திறனாளிகள் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது ற்ற்ல்://ற்ண்ழ்ன்ஸ்ரீட்ண்ழ்ஹல்ல்ஹப்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையம் வாயிலாகவோ பதிவிறக்கி உரிய சான்றுடன் இதே அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.