முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே குடிநீா் கோரி மறியல்

மணப்பாறை அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மணப்பாறை அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி பின்னத்தூா் கிழக்குகளம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சரிவர குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனராம். மேலும் பழுது நீக்க எடுத்துசென்ற ஆழ்துைளைக் கிணறு மின்மோட்டாரை இதுவரை மீண்டும் கொண்டு வரவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை காலி குடங்களுடன் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலை பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.