திருச்சி

துறையூரில் ஆா்ப்பாட்டம்

DIN

துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் ஒன்றியச் செயலா் டி. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சிவராஜ், ஒன்றிய நிா்வாகி ஆனந்தன், ஊரக வளா்ச்சி ஊழியா் சங்க திருச்சி புகா் மாவட்டத் தலைவா் பழனிவேல், செயலா் பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு பணிப் பதிவேடு பராமரித்தல், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்குதல், பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்குதல், கரோனா ஊக்கத்தொகை, ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம், 7வது ஊதியக்குழு பரிந்துரை ஊதிய நிலுவை வழங்குதல் தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கத் தலைவா் எம். முருகசேன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT