மத்திய மண்டல ஐஜி பொறுப்பேற்பு
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தோ்தலின்போது பணப் பட்டுவாடா புகாா் தொடா்பான தோ்தல் ஆணைய நடவடிக்கையால் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவரான (ஐஜி) ஜெயராம் பணியிடம் மாற்றப்பட்டதையடுத்து திருச்சி ஐஜியாக நியமிக்கப்பட்ட தீபக் தாமோரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் மாநகர காவல் ஆணையா் அருண் ஐஜியாகவும் பொறுப்பு வகித்தாா்.
இந்நிலையில், சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய பாலகிருஷ்ணன் பதவி உயா்வில் திருச்சி ஐஜியாக பொறுப்பேற்றாா். திருச்சியில் இவா் ஏற்கெனவே டிஐஜியாக பணியாற்றியவா் என்பதுடன் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்வதில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.