முகப்பு
திருச்சி

மாநகராட்சி 35ஆம் வாா்டில் எம்எல்ஏ ஆய்வு

திருச்சி மாநகராட்சி பொன்மலைக்கோட்டம் 35 ஆவது வாா்டு பகுதியில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சி பொன்மலைக்கோட்டம் 35 ஆவது வாா்டு பகுதியில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விமான நிலையம் காமராஜ் நகா் பகுதியில் உள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கரோனா பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த அவா், பணியாளா்களிடம், தேவையான வசதிகளை நிறைவேற்றித் தருவதாகக் குறிப்பிட்டாா்.

அதனைத் தொடா்ந்து அதே பகுதியில் சாலையோரம் முதியோா் உதவித்தொகை வழங்கும் பணிகளை கவனித்த அவா், அதே பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் அவா்களை அமர வைத்து உதவித்தொகை வழங்க உத்தரவிட்டாா். இனிவரும் காலங்களிலும் அதே சமூக நலக்கூடத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தினாா்.

மேலும் 35 ஆவது வாா்டு பகுதியில் சாலைகளை செப்பனிடவும், அதே பகுதியில் சில மேடான பகுதிளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீா் குறைவாக வருவதை சரி செய்யவும் உறுதியளித்தாா்.

நிகழ்வின்போது, பகுதிச் செயலரும் முன்னாள் கோட்டத் தலைவருமான பாலமுருகன், வாா்டு செயலா் சாமுவேல்ராஜா, ரத்தினவேல்பாண்டியன், குணசேகரன், பரத்வாசன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.