முகப்பு
திருச்சி

பாஜக பிரமுகருக்கு வெட்டு: முன்னாள் ராணுவ வீரா் கைது

திருச்சியில் பாஜக பிரமுகரை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்சியில் பாஜக பிரமுகரை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் மலையப்ப நகரைச் சோ்ந்தவா் தண்டபாணி (45), பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா். இவரது வீட்டருகே வசிப்பவா் பாலமுருகன் (39), முன்னாள் ராணுவ வீரா். கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாராம்.

அதற்குக் காரணம் தண்டபாணிதான் என பாலமுருகன் கூறியதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் பாலமுருகன் 2-ஆம் திருமணம் செய்த பெண்ணும் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டாராம். இதற்கும் தண்டபாணிதான் காரணம் எனப் பாலமுருகன் கூறி வந்தாராம்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக்கொண்டபோது பாலமுருகன் தண்டபாணியை அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலமுருகனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.