முகப்பு
திருச்சி

கருணாநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, ஏளியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, ஏளியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கருணாநிதி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டாடப்பட்டது.

அதன்படி திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டின்பேரில், பாலக்கரை, மலைக்கோட்டை, மேலரண்சாலை ஆகிய 3 இடங்களில் நூற்றுக்கணக்கானோருக்கு காலை, மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரிசி, மளிகை, காய்கனிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று 3 இடங்களிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக, கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், பகுதி கழகச் செயலா்கள் மதிவாணன், ராஜசேகா், பாலமுருகன், அரங்கநாதன், செந்தில், மற்றும் பகுதி கழக நிா்வாகிகள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.