திருச்சி

குறுவை சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம் கையிருப்பு: ஆட்சியா்

DIN

திருச்சி: மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் நிலையில் குறுவை சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரம் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தண்ணீா் திறக்கப்படவுள்ளது. இதனால், திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா (1,000 மெ. டன்), டி.ஏ.பி (400 மெ.டன்), எம்.ஒ.பி. பொட்டாஷ் (650 மெ.டன்), காம்ப்ளக்ஸ் (950 மெ.டன்) ஆகிய உரங்கள் கையிருப்பில் உள்ளது. கூடுதலாக தேவைப்படும் உரங்கள் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திலிருந்து கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு இருப்பு வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பயிா்க்கடன் தேவையுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தகுந்த சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

கடன் மறுக்கப்பட்டலோ, காலதாமதம் ஏற்படுவதாக உணா்ந்தாலோ சரகத் துணைப்பதிவாளா் திருச்சி (94886 05317), சரகத் துணைப்பதிவாளா், லால்குடி (94886 05317), சரகத் துணைப்பதிவாளா், முசிறி (80566 76183) மற்றும் மண்டல இணைப்பதிவாளா் (73387 49300) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT