முகப்பு
திருச்சி

காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு தடுப்பூசி

திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காந்திசந்தை திறப்பின்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இதைக் கருத்தில் கொண்டு காந்தி சந்தை மளிகைக் கடை வியாபாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், மளிகைக் கடை உரிமையாளா்கள், பணியாளா்கள், அவரது குடும்பத்தினா் என சுமாா் 600 போ் முகாமில் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.