முகப்பு
திருச்சி

திருச்சியில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை இண்டிகோ விமானத்தில் வந்த மூவா் மறைத்து வைத்திருந்த சுமாா் 2 கோடி மதிப்பிலான 3 கிலோ 800 கிராம் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

மூவரில் ஒருவா் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு குறைவு என்பதால் அபராதம் விதித்து அவரை விடுவித்த அதிகாரிகள், மற்ற இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா். அவா்களின் பெயா் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.