திருச்சி

ஜமாபந்தி ரத்து: இணைய வழி மனு ஏற்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் தீா்க்கப்படும் மனுக்களுக்கான ஜமாபந்தி நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தாண்டுக்கான ஜமாபந்தி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்கள் மூலமாகவோ இணையம் மூலமோ அனுப்பலாம்.

தமிழக அரசின் இணைய முகவரி வழியாக வரும் ஜூலை 31வரை தங்களது கோரிக்கை மனுக்களை பதிவேற்றலாம். ஆன்லைன் வழியாக பதிவேற்றப்படும் மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த கோட்ட வருவாய் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீா்வு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT